உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவந்திபுரத்தில் தேசிகர் தேரோட்டம்

திருவந்திபுரத்தில் தேசிகர் தேரோட்டம்

கடலுார்: திருவந்திபுரத்தில் தேசிகர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு,  தேரோட்டம் நடந்தது.  கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள தேசிகர் சன்னதியில், பிரம்மோற்சவம் கடந்த 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை வீதியுலா நடந்து வருகிறது.


முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி காலை 7:00 மணிக்கு தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளச் செய்து, தேரோட்டம் நடந்தது.  தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று, 9:00 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, திருமாளிகைக்கு தேசிகரை  எழுந்தருளச் செய்து, சேவை சாற்றுமுறை, பாராயணம் நடந்தது. இன்று (8ம் தேதி)  காலை 7:00 மணிக்கு திருவந்திபுரம் மலையில் ஹயக்கிரீவர் சன்னதியில், தேசிகருக்கு ரத்தனாங்கி சேவையில், மங்களாசாசனம் நடக்கிறது.பிரம்மோற்சவம் வரும் 10ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !