ஓசூர் அருகே வேப்பமரத்தில் வடிந்த பால்: பெண்கள் பூஜை வழிபாடு
ADDED :2305 days ago
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்ததால், பெண்கள் அந்த மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டு சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அன்னியாளத்தில், அரச மற்றும் மற்றும் வேப்பமரத்திற்கு நடுவே, நாகர் சுவாமி சிலை உள்ளது. இதை அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (அக்., 7ல்) காலை, வேப்பமரத்தில் இருந்து திடீரென பால் வடிந்தது. இதை யறிந்த அன்னியாளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் ஒன்று திரண்டனர். மரத்திற்கு புடவை கட்டி, பூஜைகள் செய்து, பெண்கள் வழிபட்டு சென்றனர். மேலும் சிலர், மரத்தில் இருந்து வழிந்த பாலை, தீர்த்தம் போல் கையில் பிடித்து குடித்தனர்.