சங்கராபுரத்தில் வள்ளலார் அவதார தினம்
ADDED :2199 days ago
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் வள்ளலார் அவதார தினம் நடந்தது.வள்ளலார் மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலர் நாராயணன், சன்மார்க்க இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார்.
சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்திக்கப்பட்டது. பாண்டலம் அரிமா சங்க தலைவர் வேலு முன்னிலையில் முன்னாள் ரோட்டரி தலைவர் முர்த்தி சன்மார்க்க கொடியேற்றினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.