உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி பகுதியில் சரஸ்வதி பூஜை; கோவில்களில் சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி பகுதியில் சரஸ்வதி பூஜை; கோவில்களில் சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவில்களில் சரஸ்வதி  பூஜையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி பகுதியில் உள்ள  கோவில்களில், நவராத்திரியை யொட்டி, கடந்த ஒன்பது நாட்களாக மாலை  நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

நவராத்திரி விழாவில் முக்கிய நிகழ்வான சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை நேற்று  (அக்., 7ல்), கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி ஆ.சங்கம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில், நவராத் திரி கொலுவையொட்டி, நேற்று முன்தினம் (அக்., 6ல்) அம்மன், மகிஷாசூரமர்த்தினி அலங் காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று (அக்., 7ல்) சரஸ்வதி பூஜையையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், நவராத்திரியையொட்டி  அம்மன், நாகதேவி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று (அக்., 7ல்) நடந்தது.

பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.கோவில்களில் மட்டும் இன்றி, வீடுகளிலும் பொதுமக்கள் சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். பள்ளி குழந்தைகளின் புத்தகம் மற்றும் வாகனங்கள், தொழில் உபகரணங்களுக்கு  பூஜை செய்து வழிபட்டனர்.

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு வைக்கப் பட்டு, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது.நேற்று முன் தினம் (அக்., 6ல்) மாலை, திருவிளக்கு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !