ஆயுதபூஜையையொட்டி மருதமலையில் ’ஜே ஜே’
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆயுதபூஜையையொட்டி, ஏராள மான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், முருக னின் ஏழாம் படைவீடாக கருதப்படுகிறது. நவராத்திரி விழாவையொட்டி, கடந்த, செப்., 29ம் தேதி, விநாயகர், முருகன், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய் அடங்கிய கொலு வைக்கப்பட்டது.
ஆயுதபூஜையையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி க்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதலே, பக்தர்கள் அதிகளவில் வரத்துவங்கினர்.ஆயுதபூஜையையொட்டி, மருத மலையில் கொலுவில், வைக்கப்பட்டிருந்த உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விடுமுறை தினம் என்பதால், மருதமலைக்கு ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து, சுவாமியை தரிசித்து சென்றனர்.