உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் வழிபாடு

லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் வழிபாடு

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே, லட்சுமி நரசிம்மர் கோவிலில், புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா தேரோட்டம் நடந்தது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த, ஆவணியாபுரம் சிம்ம மலையில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 30ல், கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில், கேடய உற்வம், சுவாமி திருக்கல்யாணம், கருட சேவை நடந்து முடிந்த நிலையில், நேற்று, தேரோட்டம் நடந்தது. இதில், ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனுவாச பெருமாள், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர், உற்சவ மூர்த்தி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தேரில் அலங்கரித்து சிம்மலையை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !