உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி சிவன் கோயில் முன்பு ஆறாய் ஓடுது கழிவுநீர்

சிவகாசி சிவன் கோயில் முன்பு ஆறாய் ஓடுது கழிவுநீர்

சிவகாசி:சிவகாசி சிவன் கோயிலை சுற்றிலும் உள்ள வாறுகால் துார்வாரப்படாமல் கழிவுநீர் கோயில் முன்பு ஓடுவதால் பக்தர்கள் முகம்  சுளிக்கின்றனர்.

சிவகாசி தேரடி வீதியில் அமைந்துள்ள சிவன் கோயிலுக்கு தினமும் காலை,  மாலை ஏராள மான பக்தர்கள் வருகின்றனர். பிரதோஷம் , அமாவாசை உள்ளிட்ட  விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வருகின்றனர்.

தற்சமயம் நவராத்திரி விழா தினமும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே  அதிகமான பக்தர் கள் கோயிலுக்கு வருகின்றனர். ஆனால் கோயிலைச் சுற்றிலும்  சுகாதாரமற்ற நிலை உள்ளது. கோயிலின் முன்புற வாசலிலேயே கழிவுநீர்  ஓடுகிறது.

கழிவுநீரை மிதித்துதான் பக்தர்கள் கோயிலுக்கு வர வேண்டியுள்ளது. இதேபோல்  தெற்கு பிரகராத்திலுள்ள வாறுகால், கோயில் முன்புறம் உள்ள வாறுகால் துார்வாரப்படாமல் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் தேங்கியுள்ளது. இங்கும்  கழிவுநீர் வெளியேறி கோயில் வளாகத்தில் பரவுகிறது.

மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேறி கோயில் வாசல், பிரகராத்தில்  ஓடுகிறது. இப்பகுதி யில் கடை வைத்திருப்பவர்கள், தங்களின் கழிவுகளை  வாறுகாலில் கொட்டி விடுகின்றனர். நகராட்சி பணியாளர்கள் வாறுகாலை துார்வாருவதில் அலட்சியம் காட்டுகின்றனர்.

இதனால் அதிகளவில் துர்நாற்றம் ஏற்படுகிறது. மன அமைதிக்காக கோயிலுக்கு  வருபவர் கள், துர்நாற்றத்தினால் மன அமைதி இழந்து திரும்ப வேண்டியுள்ளது.  மேலும் சுகாதரக் கேடும் ஏற்படுகிறது. எனவே கோயிலை சுற்றியுள்ள  வாறுகாலை துார்வாரி கழிவுகள் வெளி யேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !