உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்திருமலை வேங்கடேஸ்வர சுவாமி கோயிலில் தேரோட்டம்

தென்திருமலை வேங்கடேஸ்வர சுவாமி கோயிலில் தேரோட்டம்

மேட்டுப்பாளையம்: தென்திருமலை வேங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தென்திருமலை வேங்கடேஸ்வர சுவாமி கோயிலில் புரட்டாசி பிரமோற்சவ தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். வருடாந்திர பிரமோற்சவம் கடந்த அக்டோபர் செப்டம்பர் 30 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி வெங்கடேஸ்வர பெருமாள் பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.  பிரமோற்சவ நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வைபவம் நடைபெற்றது. மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியிடன் வலம் வரும் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக  நடைபெற்றது. கோவிந்தா, கோவிந்தா கோஷங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரானது நான்கு மாட வீதிகளில்  வலம் வந்து கோவிலை சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !