உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமாதானமே உயர்ந்தது

சமாதானமே உயர்ந்தது

புலி ஒன்று குளத்தில் தண்ணீர் குடிக்க வந்தது. அந்த நேரம் சிங்கம் ஒன்றும் அங்கு வந்தது. இருவரில் யார் முதலில் குடிப்பது என தகராறு வந்தது. ”நான் தான் காட்டுக்கு ராஜா. அதனால் முதல் உரிமை எனக்கே” என்றது சிங்கம். ”நீ ராஜாவாக இருக்கலாம். ஆனால், முதலில் வந்தது நானே” என புலி உறுமியது. இரண்டும் கைகலப்பில் இறங்கின. இதனைக் கண்ட கழுகுகள், ”இருவரில் யார் செத்தாலும் நமக்கு வேட்டை தான்” என தங்களுக்குள் பேசின. அதைக் கேட்ட சிங்கம் சுதாரித்தது.  ”நண்பனே! நமக்குள் சண்டை வேண்டாம். இறந்ததும் நம் உடலை தின்ன கழுகுகள் காத்திருக்கின்றன. ஒற்றுமையாக தண்ணீர் குடிப்போம்” என்றது. புலியும் சமாதானமானது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது உண்மை தானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !