உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி கொலு நிறைவு: பரிவேட்டை அலங்காரத்தில் முருகன்

சக்தி கொலு நிறைவு: பரிவேட்டை அலங்காரத்தில் முருகன்

சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி நிறைவு நாளான நேற்று, முருகப்பெருமான் பரிவேட்டை அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, கடந்த, 29ம் தேதி முதல், நேற்று வரை, சக்தி கொலு நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று, இளம் தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து, ஆரம்ப கல்வியை துவக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. மாலை, ஸ்ருதீஸ் நாட்டிய கலாலயாவின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, கண்டு ரசித்தனர். நேற்று இரவு, முருகப் பெருமான் பரிவேட்டை அலங்காரத்தில், வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !