டி.சுப்புலாபுரம் நாழிமலை புரட்டாசி வழிபாடு விழா
ADDED :2191 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் நாழிமலை ஈஸ்வரன் கோயில் வழிபாட்டு விழா நடந்தது. இக்கோயில் நாழிமலையின் உச்சியில் இரண்டு ஆயிரத்து ஐநுாறு அடி உயரத்தில் உள்ளது.
மலை உச்சியில் உள்ள கோயிலில் சுவாமி ஈஸ்வரன் அவரது சீடர்களுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மூன்றாம் செவ்வாய் கிழமையில் வருடாபிஷேகம், சிறப்பு அன்னதானம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.
கடந்த 300 ஆண்டுகளாக இந்த விழாவை தொடர்வதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பவுர்ணமி நாளில் மலை அடிவாரத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்று வருவது கோயிலின் சிறப்பு. நேற்று (அக்., 8ல்) நடந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஊர் முக்கிய பிரமுகர்கள் ராமராஜ், அழகர்சாமி, சீனிவாசன், முருகன், நாகராஜ் முன்னிலையில் பக்தர்கள் செய்திருந்தனர்.