உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையத்தில் ஷீரடி சாய்பாபா மகா சமாதி தின விழா

ராஜபாளையத்தில் ஷீரடி சாய்பாபா மகா சமாதி தின விழா

ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார் கோயில் ரோட்டில் உள்ள ஷீரடி சாயிபாபா  கோயிலில் சாய்பாபாவின் 101 வது மகா சமாதி தின நிகழ்ச்சி நடந்தது.

காலை 5:00 மணி முதல் ஆரத்தி, சாய் சத்சரித பாராயணம் நடந்தது. காலை 10:00  மணிக்கு 108 சங்கினால் மகாருத்ரா அபிஷேகம், சாயி சஹஸ்ர நாமம் பாராயணம்  நடந்தது.

தொடர்ந்து பெண் பக்தர்களால் கோலாட்டம் மற்றும் உற்ஸவ மூர்த்திக்கு புஷ்ப சயன  அலங் காரம் நடைபெற்றது. சாய் சாரிட்டீஸ் சார்பில் சிறப்பு அன்னதானம் நடந்தது.மாலை 4:00 மணி க்கு திருவிளக்கு பூஜை, பக்தர்கள் பூக்களை கொண்டு பாத பூஜை  சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி, இரவு ஆரத்தி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஷீரடி சாயி சேவா டிரஸ்ட் சார்பில் விக்னேஷ் தலைமை யில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !