உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையத்தில் ஏடு துவக்க நிகழ்ச்சி

ராஜபாளையத்தில் ஏடு துவக்க நிகழ்ச்சி

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுப் பகுதி கோயில், நர்சரி மற்றும் துவக்க  பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கான ஏடு துவங்கும் விழா நடந் தது.

அதிகாலை முதல் சொக்கர் கோயில், சாரதாம்பாள் கோயிலில் சரஸ்வதி தேவி சிலைக்கு  சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. காலை 6:30 மணிக்கு சரஸ்வதி ஸ்லோகங்களை  கூற அர்ச்சனை நடந்தது.

ஏடு துவக்க விழா நிகழ்ச்சிபோது பெற்றோருடன் வந்திருந்த குழந்தைகளுக்கு  திலகமிட்டு குழந்தைகளின் நாவில் தேன்தடவி, பச்ச அரிசியில் ஓம், அ, எழுத்துக்களை  எழுத கற்றுகொடுத் தனர். பின்பு பள்ளிகளில் தனது குழந்தைகளை சேர்த்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !