உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தசுவாமி கோவிலில் அலைமோதிய கூட்டம்!

கந்தசுவாமி கோவிலில் அலைமோதிய கூட்டம்!

திருப்போரூர்:கந்தசுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில், 12திருமணங்கள் மற்றும் 36 காது குத்துதல் நிகழ்ச்சிகள் நடந்ததால், கூட்டம் அலைமோதியது.கர ஆண்டின் பங்குனி மாத கடைசி சுபமுகூர்த்தநாள் என்பதால், திருப்போர் கந்தசுவாமி கோவிலில், நேற்று ஒரே நாளில், 12 திருமணங்கள், 36காது குத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதுதவிர,நூற்றுக்கணக்கானோர், மொட்டை அடித்தும்,காவடிகள் எடுத்தும் பிரார்த்தனையை நிறைவேற்றினர். இதனால், கோவிலில் காலை 7.00 முதல்,பகல், 2.00 மணி வரை கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !