உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி விஷ்ணு துர்கைக்கு விளக்கு பூஜை

திருத்தணி விஷ்ணு துர்கைக்கு விளக்கு பூஜை

திருத்தணி:திருத்தணி-, கன்னிகாபுரம் மாநில நெடுஞ்சாலையில், விஷ்ணு துர்கை  அம்மன் கோவிலில், நவராத்திரி நிறைவையொட்டி, திருவிளக்கு பூஜை நடந்தது.

காலை, 10:00 மணிக்கு, பூ கரகம் ஊர்வலம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு,  மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் மற்றும் தீபாராதனை  நடந்தது.மாலை, 4:00 மணிக்கு, அம்மன் வர்ணி ப்பு, மாலை, 6:00 மணிக்கு  திருவிளக்கு பூஜைநடந்தது.இதில், 108 பெண்கள் பங்கேற்று, விளக்கு பூஜையும்,  தொடர்ந்து தீச்சட்டி ஏந்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன்வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !