உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி சுந்தர விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை

செஞ்சி சுந்தர விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை

செஞ்சி:செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் நவராத்திரியை  முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.

அதனையொட்டி, கோவிலில் உள்ள துர்க்கைக்கு தினமும் சிறப்பு அபிஷேக,  அலங்காரம் நடந்தது. 7ம் நாள் விழாவில் மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு  பூஜை நடந்தது. தொடர்ந்து துர்க்கை, மீனாட்சியம்மன் அலங்காரத்தில்  அருள்பாலித்தார். இரவு 7:30 மணிக்கு மகா தீபாரா தனையும், பக்தர்களுக்கு  பிரசாத வினியோகமும் நடந்தது.இதில் நிர்வாக குழுவினர் மற்றும் திரளான  பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !