உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் விஜயதசமி வித்யாரம்பம் விழா கோலாகலம்

திருப்பூர் விஜயதசமி வித்யாரம்பம் விழா கோலாகலம்

திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்த எழுத்தறிவித்தல்  நிகழ்ச்சி யில், 325 குழந்தைகள் பங்கேற்றனர்.

நவராத்திரி விழாவின் நிறைவாக, விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது.  நேற்று 8ம் தேதி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வது வழக்கம். அதன்படி, திருப்பூர், அவிநாசி, பல்லடம் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், வித்யாரம்ப நிகழ்ச்சி நடந்தது.

திருப்பூர் அறம் அறக்கட்டளை, ஸ்ரீசக்தி இன்ஸ்டிடியூஷன்ஸ் சார்பில், 8ம் ஆண்டு  எழுத்தறி வித்தல் விழா, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில் நடந்தது.

வீணை இசை கலைஞர் ராஜ்குமாரின் இன்னிசை நிகழ்ச்சியுடன், வித்யாரம்பம்  துவங்கியது. அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் சுப்பிரமணியம் தலைமை  வகித்தார். ஏற்றுமதி யாளர் சங்க பொது செயலாளர் விஜயகுமார் முன்னிலை  வகித்தார்.

எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், தலைமையாசிரியர் பழனிசாமி, திருச்சி  கோபால்ரத்னம், தேசிய வாலிபால் வீரர் தேவராஜன், வீணை இசைக்கலைஞர்  ராஜ்குமார், குழந்தைகளுக்கு, எழுத்தறிவித்தல் செய்வித்தனர்.

தர்ப்பை புல்லை, தேனில் நனைத்து, குழந்தைகளின் நாக்கில், ஓம் மற்றும் ’அ’  என்ற வார்த்தைகளை எழுதினர். தொடர்ந்து, தட்டில் நிரப்பிய நெல்லில், ’அ’ என  குழந்தைகளில் கையை பிடித்து எழுத வைத்து, வாழ்வில் சிறக்க வேண்டுமென  வாழ்த்தினர். பங்கேற்ற குழந்கைளுக்கும், சிலேட், பென்சில், கலரிங் புத்தகம்,  ’கிரயான்ஸ்’, வாய்ப்பாடு மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

* ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஐயப்பன் பக்த ஜனசங்கம் சார்பில், திருப்பூர் -  காலேஜ் ரோட்டி லுள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று  8ம் தேதி நடந்தது. ஐயப்ப குருமார்கள், குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைத்தனர். ஏராளமான குழந்தைகள், ஐயப்பனை வழிபட்டு, வித்யாரம்ப நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !