உடுமலை சீரடி ஆனந்தசாயி கோவிலில் பாபா மகா சமாதி தின விழா
ADDED :2287 days ago
உடுமலை:உடுமலை சீரடி ஆனந்தசாயி கோவிலில், பாபா மகா சமாதி தினவிழா மற்றும் நவராத்திரி விழா நடந்தது.
உடுமலை தில்லை நகரில், சீரடி ஆனந்தசாயி கோவில் உள்ளது. கோவிலில், செப்., 29 ல், நவராத் திரி விழா துவங்கியது. நாள்தோறும் சாய்பஜன் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று 8ம் தேதி காலை, சாய்பாபாவின், மகா சமாதி, 101 ம் ஆண்டு விழாவையொட்டி, நாமஜெபம் மற்றும் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து, தீபாராதனை நடத்தப்பட்டு, மகா பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.