கடலுார் ஹயக்ரீவர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
ADDED :2286 days ago
கடலுார்:விஜயதசமியை முன்னிட்டு, திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில், குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
விஜயதசமி விழாவை முன்னிட்டு, கோவில்களில் குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் எனும் ஏடு தொடங்கு நிகழ்ச்சி நடந்தது. அதன்படி, கடலுார் திருவந்திபுரம் மலையில் உள்ள ஹயக்ரீவர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை ஹயக்ரீவருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளை, அழைத்து வந்து, எழுது பொருட்களை வைத்து வழிபட்டனர். ஹயக்ரீவர் சன்னதி எதிரே குழந்தைகளை அமர்த்தி, நெல் மற்றும் அரிசியில், எழுத்துகளை எழுத வைத்தனர்.