ஆபத்தான விஷயம்!
ADDED :2291 days ago
தற்கால சொல்லகராதியில் இருந்து ‘பாவம்’ என்ற வார்த்தை கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. ஆனால் ‘பாவம்’ என்ற வார்த்தை வேதாகமத்திலிருந்து அகலவே இல்லை. பாவம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்நாட்களில் மக்களுக்கு அறிவுத்த வேண்டியது மிக அவசியமாயிருக்கிறது. அது வாழ்க்கையை அழிக்கிறது. தாங்கொணா வேதனையை உண்டாக்குகிறது. பாவத்தை லேசாக எடுத்துக் கொள்கிறவர்கள் தேவனையும் லேசாகவே எடுத்துக் கொள்ளுகின்றனர். இது எவ்வளவு ஆபத்தான விஷயம்! புரிந்து நடந்து கொள்ளுங்கள், பாவத்தை அறவே தவிருங்கள்.