காளி அவதாரத்தில் அரசாளவந்த அம்மன்
ADDED :2187 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு தினமும் அரசாளவந்த அம்மன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் நடந்தன. விழாவின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு அம்மன் காளி அவதாரம் எடுத்து நரகாசுரனை அம்பு எய்து அழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, வீதி ஊர்வலமாக காளி அவதாரத்தில் வந்த அம்மன் நரகாசுரனை அம்பு எய்து தீயிட்டு அழித்தார். இதனை பக்தர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஏற்பாடுகளை இந்து சமய மன்றத்தினர் செய்திருந்தனர்.