அவலுார்பேட்டை கன்னிகாபரமேஸ்வரிஅம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2235 days ago
அவலுார்பேட்டை:அவலுார்பேட்டை கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டைவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா நடந்தது.
விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஆரிய வைசிய சமூகத்தினர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.