அன்னமலை கோவிலில் 13ல் காவடி பெருவிழா!
ADDED :4935 days ago
மஞ்சூர் : மஞ்சூர் அருகேவுள்ள அன்னமலை முருகன் கோவிலில் வரும் 13ம் தேதி காவடி பெருவிழா நடக்கிறது. நீலகிரியின் பழநி என்றழைக்கப்படும் அன்னமலை முருகன் கோவிலில் 23ம் ஆண்டு காவடி பெருவிழாவையொட்டி 12ம் தேதி மாலை வாஸ்து வழிபாடு நடக்கிறது. 13ம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் மகாயாகம், கோ பூஜை மற்றும் காலை 8.30 மணிக்கு காவடி பெருவிழா, ஆதிவாசி பழங்குடி மக்களின் மேள தாளங்களுடன் அன்னமலைக்கு ஊர்வலம் வருகிறது. காலை 11 மணி முதல் ஆன்மிக கருத்தரங்கம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மகா தீபாராதனையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, காரமடை, கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி செய்து வருகிறார்.