குளித்தலையில் அம்புபோடும் நிகழ்ச்சியுடன் நவராத்திரி நிறைவு
ADDED :2193 days ago
குளித்தலை: தோகைமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், விமரிசையாக நடந்த அம்பு போடும் நிகழ்ச்சியுடன், நவராத்திரி விழா முடிவடைந்தது.
குளித்தலை அடுத்த, தோகைமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் 8ம் தேதி இரவு, கொலுவில் பல்வேறு சுவாமி பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நிறைவாக சுப்பிரமணியசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, அம்பு போடும் நிகழ்ச்சி, அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில், விமரிசையாக நடந்தது. இதில், தோகைமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.