உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தல்

பழநியில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தல்

பழநி: பழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேகப் பணிகளை உடனடியாக  துவங்க இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு வலியுறுத்தினர்.பழநி அழகு  நாச்சியம்மன் கோயிலில் இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள்  தேர்வு கூட்டம் நடந்தது. கூட்டமைப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு  தலைமை வகித்தார்.மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகளை உடனடியாக  துவங்க வேண்டும். கோயில் கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள்  உள்வாடகைக்கு விடுவதை தடுக்க வேண்டும். 2வது ரோப்கார் திட்டத்தை  விரைவில் முடிக்க வேண்டும்.

கோயில் தெப்பக்குளங்களை துார்வார வேண்டும். செக்யூரிட்டிகளுக்கு நியாயமான சம்பளம் தர வேண்டும். மாவட்ட தலைவர் துரை, துணைத் தலைவர் மணிகண்டன், செயலாளர் ஐயப்பன், மகளிரணி உமாமகேஸ்வரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !