உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் சாய்பாபா மகா சமாதி விழாவில் பக்தர்கள் பால் குடம் எடுத்தனர்

ராமநாதபுரம் சாய்பாபா மகா சமாதி விழாவில் பக்தர்கள் பால் குடம் எடுத்தனர்

ராமநாதபுரம்: தேவிப்பட்டினம் சாய்பாபா கோயில் மகா சமாதிவிழாவில்  பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். தேவிப்பட்டினம் நவபாஷாண  கோயில் அருகில்சாய்பாபா கோயில் உள்ளது. சாய் பாபாவின் 101 வது மகா  சமாதி தினத்தை முன்னிட்டு வர்த்தக சங்கத் தலைவர் ஜெயபால் -ஜமுனா  தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.

நவபாஷாண கோயில் எதிரில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து சாய் பக்தர்கள் குமுக் கோட்டை முத்துவேல் பாண்டியன் தலைமையில் பால்குடம் எடுத்து நகர் வலம்வந்தனர்.

கடலடைத்த ஆதி ஜெகநாத பெருமாள்கோயிலில் சிறப்பு ஆரத்தி நடந்தது. பின் பால்குட ஊர்வலம் சாய்பாபா கோயிலை அடைந்தது. அர்ச்சகர்கள் சங்கர் அய்யர், சீனிவாச ராகவஅய்யங்கார் யாகசாலை பூஜை நடத்தி சாய்பாபாவின் திருஉருவத்திற்கு பாலாபிஷேகம் செய்தனர்.கோயில் நிர்வாகி கண்ணன் பக்தர்களுக்குபிரசாதம், அன்னதானம் வழங்கினார். இதில்ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !