முதுகுளத்துார் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா
ADDED :2192 days ago
முதுகுளத்துார்: இதற்காக கடந்த மாதம் மண்குதிரை செய்ய பெருங்கரணை கிராமத்தில் பிடிமண் வழங்கப்பட்டது.புரவி எடுப்பு திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்புக் கட்டுதலுடன் துவங்கியது.
கிராமத்தில் தினமும் இளைஞர்கள் ஒயிலாட்டம்,பெண்கள் கும்மியடித்தும் வந்தனர். பெருங் கரணை கிராமத்தில் தயார் செய்யப்பட்ட குதிரை,தவழும் பிள்ளை உருவத்தை ஊர்வலமாக கிராமமக்கள் எடுத்து வந்து வழிபட்டனர்.
கிராமமக்கள் கோயிலில் பொங்கலிட்டுகிடா வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத் தினர்.குதிரை,தவழும் பிள்ளையை கிராமத்தில் இருந்து அய்யனார் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.பின்பு அய்யனார் கோயிலில் வைத்து குதிரை,தவழும் பிள்ளைகளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.விழாவில் முதுகுளத்துரை சுற்றியுள்ள ஏராள மான கிராமமக்கள் கலந்து கொண்டனர்.