உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்துார் கோயில்களில் முளைப்பாரி திருவிழா

முதுகுளத்துார் கோயில்களில் முளைப்பாரி திருவிழா

முதுகுளத்துார்:செல்வநாயகபுரத்தில் செல்வி அம்மன் கோயில் முளைப்பாரி  ஊர்வலம் ஆற்றுப்பாலம், பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை வழியாக செல்வி அம்மன்  கோயிலை அடைந்தது. பின் சங்கரபாண்டி ஊரணியில் கரைத்தனர்.

*வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் வாழவந்தாள் அம்மன் கோயில்  முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.கிராமத்தில் உள்ள முளைக்கொட்டு  திண்ணையில் இருந்து முளைப்பாரி ஊர்வலமாக கிராமத்தை சுற்றி  வந்தனர்.ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும்,பெண்கள் கும்மி யடித்தனர். இரவு நாடகம்  நடைபெற்றது.

*ராமலிங்கபுரம் கிராமத்தில் முப்பிடாதி அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடைபெற் றது. கிராம மக்கள் பொங்கலிட்டு நேர்த்திகடன்  செலுத்தினர். முளைப்பாரி சுற்றிவந்து ஊரணி யில் கரைத்தனர்.

*புளியங்குடி கிராமத்தில் மந்தைபிடாரி அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவில்மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் முளைப்பாரி துாக்கி ஊர்வலமாக வந்தனர். திருவாடானை: திருவாடானை வடக்கு தெரு மாரியம்மன்கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று 9ம் தேதி காலை முளைப்பாரி ஊர்வலம்  நடந்தது.

ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்துசென்றனர். அதனை தொடர்ந்து  மங்களநாதன் குளத்தில் கரைக்கப்பட்டது. பெண்கள் மாரியம்மன் பக்தி பாடல்களை  பாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !