உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவதானப்பட்டி கோயில் புரட்டாசி திருவிழா

தேவதானப்பட்டி கோயில் புரட்டாசி திருவிழா

தேவதானப்பட்டி: ஜெயமங்கலம், குள்ளப்புரம் கோயில் புரட்டாசி திருவிழாவில்  பக்தர்கள் அக்னி சட்டி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.பெரியகுளம்  ஒன்றியம் ஜெயமங்கலம் கவுமழை மாரியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா  இரண்டுநாட்களாக நடைபெற்று வருகிறது. சில்வார்பட்டி, சிந்துவம்பட்டி,  நடுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.  பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

* குள்ளப்புரம் மாரியம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில் கோயில்புரம், சந்தராபுரம், மருகால்பட்டி கிராமங்களைச்சேர்ந்தவர்கள் அம்மனை தரிசிக்கின்றனர். பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !