உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி சுரகரேஷ்வரர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம்

காஞ்சி சுரகரேஷ்வரர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சுரகரேஷ்வரர் கோவிலில், திருப்பணி முடிந்ததால், விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், பழமையான சுரகரேஷ்வரர் கோவில், தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது. கடந்த, 1972க்கு பின், கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.பல காலக்கட்டங்களில், இக்கோவிலில் திருப்பணி நடத்த திட்டமிடப்பட்டு, கைவிடப்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டு, திருப்பணி துவங்கி, சமீபத்தில் நிறைவடைந்தது. கோவில் சன்னிதி மற்றும் ராஜகோபுரம் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன. இது குறித்து, தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இக்கோவில் திருப்பணி, 35 லட்சம் ரூபாயில் நடந்துள்ளது. கோவில் உட்புற சுவர், தோட்டம் அமைக்கப்பட இருக்கிறது. அடுத்த மாதம், கும்பாபிஷேகம் நடத்த, அறநிலையத் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !