தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை
ADDED :2197 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில், பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது.
பிரதோஷ விழாவை முன்னிட்டு, கோவிலின் முன்பு உள்ள மஹா நந்திக்கு கங்கை நீர், திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு, எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, இளநீர், பால், சந்தணம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. விழாவில் தஞ்சை நகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நந்தியம் பெருமானை வழிபட்டனர்.