ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயலில் ராமர் உலா
ADDED :2194 days ago
ராமேஸ்வரம்: புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயலில் இருந்து ஸ்ரீ ராமர் சிதை வீதி உலா வந்தனர். நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை யொட்டி நேற்று திருக்கோயிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் ஸ்ரீ ராமர், சீதை, லெட்சுமணர் புறப்பாடாகி திட்டகுடி, வர்த்தகன் தெரு, வேர்க்கோடு வழியாக வீதி உலா சென்று தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் எழுந்தருளினர்.பின் அங்கு ஸ்ரீராமர், சீதைக்கு மகா தீபாரதனை நடத்தினர். பின் அங்கிருந்து புறப்பட்டு கோயில் ரதவீதியில் உலா வந்து மீண்டும் கோயிலுக்கு சென்றனர். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.