உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சயன கோலத்தில் அத்திவரதர்

சயன கோலத்தில் அத்திவரதர்

 கோவை: ஐயப்பன் பூஜா சங்கத்தில், நடந்து வரும் நாம சங்கீர்த்தன திருவிழாவில், சயன கோலத்தில் அத்திவரதர் அருள்பாலித்தார்.நாமசங்கீர்த்தனா டிரஸ்ட் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு பண்பாடு, கலாசாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு, ஆண்டுதோறும் நாமசங்கீர்த்தன இசைப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ், பரிசு, கேடயம் வழங்கப்படுகிறது.


இந்தாண்டு நாமசங்கீர்த்தன திருவிழா, ராம்நகர் ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு, தெப்பருமாநல்லுார் ஸ்ரீநரசிம்மன் ரவி ஜோஷி குழுவினரின், ஸ்ரீஜெயதேவர் அருளிய அஷ்டபதி மகா காவியம் நடந்தது.மதியம், 1:30க்கு தீபாராதனை நடந்தது. சயன கோலத்தில் அத்திவரதர் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தரிசித்தனர். மாலை, 5:00க்கு ஜெயராமன் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை, 7:00க்கு உஞ்சவிருத்தி, காலை, 9:00க்கு ஸ்ரீபத்மாவதி திருக்கல்யாணம், நாமசங்கீர்த்தன இசைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. மாலை, 4:30க்கு சுரேஷ் பாகவதர் குழுவினரின் வசந்தோற்சவம் மற்றும் ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !