உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கநாத பெருமாளுக்கு கிருஷ்ணன் அலங்காரம்

ரங்கநாத பெருமாளுக்கு கிருஷ்ணன் அலங்காரம்

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில்,  உற்சவர்  பெருமாள், தர்பார் கிருஷ்ணன் அலங்காரத்தில்  அருள் பாலித்தார். பண்ருட்டி திருவதிகை ரங்கநாயகி தாயார் சமேத  ரங்கநாத பெருமாள்  கோவிலில், புரட்டாசி மாதம்  4 வது சனிக்கிழமையை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 8:00 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பகல் 12;00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 5:00 மணிக்கு நித்யபடி பூஜை,  இரவு 7:00 மணிக்கு உற்சவர் ரங்கநாத பெருமாள் தர்பார் கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:30 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடும், இரவு 10:00  மணிக்கு ஏகாந்த சேவையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !