உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலீஸ்வரருக்கு திரவிய அபிஷேகம்

வாலீஸ்வரருக்கு திரவிய அபிஷேகம்

சேவூர்: புரட்டாசி சதுர்த்தியை முன்னிட்டு, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி திதி நாளான நேற்று முன்தினம், சேவூர் வாலீஸ்வரர் கோவிலில், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்பட, 32 வகை திரவியங்களால் ஸ்ரீநடராஜர் சமேத சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. செண்பக பூ, தாமரை மாலை, வில்வமாலைகளால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, மலர் அர்ச்சனை செய்யப்பட்டது. தேவாரம்,திருவாசகம் உள்ளிட்ட பஞ்ச புராண கூட்டு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !