உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்ட அதிகாரிகள்

கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்ட அதிகாரிகள்

பிராட்வே: பிராட்வே, கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தை, அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.


பிராட்வே, பூங்கா நகர், ராசப்ப செட்டி தெருவில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கந்தசாமி கோவில் உள்ளது. இக்கோவிலின், ராஜகோபுரம் கீழ்புறம், மேற்கு பகுதியில் உள்ள கடையில், கோகிலா என்பவர் வாடகைதாரராக இருந்தார். கோவில் பயன்பாட்டிற்கு, அந்த இடம் தேவைப்பட்டதால், வாடகைத்தாரர் வெளியேற அறிவுறுத்தப்பட்டது. வாடகைதாரர், வாரிசு தாரர் எனக்கூறி, இடத்திற்கு உரிமை கோரினார்.சென்னை உயர் நீதிமன்றம், 30ம் தேதி அளித்த தீர்ப்பின் படி, நேற்று மாலை, அறநிலையத் துறை உதவி ஆணையர் கவெனிதா, செயல் அலுவலர் ஜெயராமன் உள்ளிட்ட அதிகாரிகள், பூக்கடை போலீசார் பாதுகாப்புடன், கோவிலுக்கு சொந்தமான, 133 சதுர அடி இடத்தை மீட்டு, சீல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !