உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) குழந்தை பாக்கியம்

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) குழந்தை பாக்கியம்

குரு அக்.28 வரையிலும், செவ்வாய் நவ.12 வரையிலும் நன்மை தருவர். புதன், சுக்கிரன், கேது, சனியால் மாதம் முழுவதும்  நற்பலன் கிடைக்கும். மற்ற கிரகங்கள்  திருப்தியற்ற நிலையில் தான் உள்ளன. எந்த பிரச்னை வந்தாலும் அதை சுக்கிரன், புதன் முறியடித்து உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வர். பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும்.  உறவினர்களிடம் சுமுக நிலை உண்டாகும். அக்.28க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். சனி, கேது, செவ்வாயால் பொருளாதார வளம் பெருகும். பக்தி எண்ணம் மேலோங்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். புதிய வீடு, மனை வாங்க யோகமுண்டு.   குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வசதி, வாய்ப்பு பெருகும். சுபநிழ்ச்சிகள் கைகூடும். தம்பதியிடையே அன்பு மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். அவர்களால் பணஉதவி கிடைக்கும். பெண்கள் குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வருவர். பிறந்த வீட்டாரின் உதவி கிடைக்கும். தோழிகள் உறுதுணையாக இருப்பர். அண்டை வீட்டாரின் அனுகூலம் உண்டு. நவ.12 க்கு பிறகு  உடல்நலக்குறைவு ஏற்படலாம். பயணத்தின் போது கவனம் தேவை.சிறப்பான பலன்கள்தொழிலதிபர்களுக்கு பகைவர் தொல்லை, மறைமுகப்போட்டி, அரசு வகையில் இருந்த இடையூறுகள் மறையும். வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். நல்ல பணப்புழக்கம் இருக்கும். தங்கம், வெள்ளி, வைரம் வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவுடன் அதிக லாபம் சம்பாதிப்பர்.அரசு பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும்.தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  ஐ.டி.துறையினர் சிறப்பான வளர்ச்சி காண்பர். பதவி உயர்வு கிடைக்கும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.வக்கீல்கள் சாதுர்யமாக செயல்பட்டு எதிர்பாராத வகையில் வருமானம் பெறுவர். ஆசிரியர்கள் சகஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கப் பெறுவர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். கோரிக்கைகளை நவ.12க்குள் கேட்டு பெறவும்.  அரசியல்வாதிகளுக்கு சாதகமான காலகட்டமாக அமையும். கலைஞர்கள்  புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர்.விவசாயிகளுக்கு நெல், மஞ்சள், சோளம் போன்றவற்றில் அதிக மகசூல் கிடைக்கும்.  சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரத்தில் முடிவு சாதகமாக இருக்கும். பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையால் முன்னேறுவர். கல்லூரி மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவர். சுமாரான பலன்கள்தொழிலதிபர்கள், வியாபாரிகள் நவ.12க்கு பிறகு சிலருக்கு பெண்களால் பிரச்னை, பண இழப்புக்கு வாய்ப்புண்டு. கவனம் தேவை. மருத்துவர்கள் சக பெண் ஊழியர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.வக்கீல்களுக்கு நவ.12க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.ஆசிரியர்கள் அக்.28க்கு பிறகு விரும்பாத இடமாற்றத்தை சந்திப்பர். பணவிரயம் ஏற்படும்.போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் நவ.12க்கு பிறகு திடீர் பயணம் செல்ல நேரிடும். வேலைப்பளு அதிகரிக்கும்.  அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அரசியல்வாதிகள் நவ.12க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.கல்லூரி மாணவர்களுக்கு அக்.28க்கு பிறகு  படிப்பில் கூடுதல் கவனம் தேவை. * நல்லநாள்: அக்.18,21,22, 23,26,27,நவ.1,2,3,4,5, 11,12,13,14,15* கவனநாள்: நவ.6,7 சந்திராஷ்டமம்* அதிர்ஷ்ட எண்: 4,5 * நிறம்: பச்சை, வெள்ளை * பரிகாரம்●  ஞாயிறன்று ஏழைக்கு கோதுமை தானம்●  வியாழனன்று தட்சணாமூர்த்தி  வழிபாடு●  செவ்வாயன்று முருகனுக்கு நெய் தீபம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !