‘அடியே‘ என அழைக்கலாமா?
ADDED :2242 days ago
ஒருநாள் சாரதாதேவியார், தன் கணவர் ராமகிருஷ்ணருக்கு உணவு எடுத்து வந்தார். பரமஹம்சர் தன் சகோதரரின் மகளான லட்சுமி வருவதாக எண்ணி,‘துயி‘ என அழைத்து விட்டார். வங்க மொழியில் ‘துயி“ என்பதற்கு ‘அடியே‘ என பொருள். சிறுவர்களையும், வேலைக்காரர்களையும் ‘துயி“ என்று தான் அழைப்பது வழக்கம். வந்தது தன் மனைவி என அறிந்த ராமகிருஷ்ணர் மன்னிப்பு கேட்டார். இரவில் தூக்கமின்றி தவித்தார். பின்னாளில் யாரும் தன்னிடம் மதிப்பு குறைவாக பேசினால் இச்சம்பவம் சாரதா தேவியாருக்கு நினைவுக்கு வந்துவிடும். “அடியே என அழைக்காத ஒருவரை கணவராக பெற்றது என் பாக்கியம். என் கருத்தை மதிப்பவர் அவர். பூவினால் கூட என்னை அடித்ததில்லை“ என சாரதாதேவியார் சொல்வார்.