பதவி பெரிதல்ல!
ADDED :2242 days ago
சாதாரண படை வீரராக இருந்தவர் காலித் பின் வலித். வாழ்நாளில் பெரும்பகுதியை இறைத்தொண்டுக்காக செலவிட்டார். மரணத் தறுவாயில், “நான் எத்தனை போர்களில் ஈடுபட்டேன். என் உயிரை போர்க்களத்தில் தியாகம் செய்திருந்தால் சுவனத்தை (சொர்க்கத்தை) அடைந்திருப்பேனே!“ என வருந்தினார். இதை அறிந்த மன்னர், “உண்மையில் இவரே உயர்ந்த மனிதர்“ என கண் கலங்கினார். மன்னர் மட்டுமின்றி மதினா நகரமே சோகத்தில் ஆழ்ந்தது. பதவியில் இருந்து தான் சேவை செய்ய வேண்டும் என்பதில்லை. சாதாரண படைவீரராக இருந்தாலும், மக்கள் மனதில் இன்றும் இவர்கள் வாழ்கின்றனர்.