உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா நிறைவு
ADDED :2183 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், அதிகாலை 5:30 மணிக்கு மூலவர் உலகளந்த பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, 8:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் கண்ணாடி அறைக்கு எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் வேத விற்பன்னர்கள் வேதமந்திரம் முழங்க, சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், திருக்கல்யாண வைபவம் சாற்றுமுறை நடந்தது. புரட்டாசி கடைசி தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.