உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் சங்கட ஹர சதுர்த்தி விழா

திண்டிவனம் சங்கட ஹர சதுர்த்தி விழா

திண்டிவனம்: தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.திண்டிவனம் - செஞ்சி ரோட்டிலுள்ள தீவனுாரில் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் (அக்., 17ல்) சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது.விழாவையொட்டி மாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு 108 சங்காபிஷேக மும் நடந்தது.விநாயகபெருமான் திருமலை திருப்பதி பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !