உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவிலில் ரூ. 38.72 லட்சம் காணிக்கை

மாசாணியம்மன் கோவிலில் ரூ. 38.72 லட்சம் காணிக்கை

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், 38.72 லட்சம் ரூபாய் காணிக்கை இருந்தது.

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. நிரந்தர உண்டியல்களில், 29 லட்சத்து, 73 ஆயிரத்து, 633 ரூபாயும்; தட்டு காணிக்கை உண்டியல்களில், எட்டு லட்சத்து, 99 ஆயிரத்து, 234 ரூபாயும் காணிக்கை இருந்தது. மொத்தம், 210 கிராம் தங்கம் மற்றும் 313 கிராம் வெள்ளி இருந்தது. மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த் தலைமை வகித்தார், ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி ஆய்வர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !