உலக நன்மை வேண்டி அருளுரை
ADDED :2282 days ago
சிவகாசி : சிவகாசியில் காட் இந்தியா டிரஸ்ட் சிவகாசி நாமதுவார் சார்பில் மஹாரண்யம் முரளிதர சுவாமிஜியின் ஆன்மிக அருளுரை நிகழ்ச்சி நடந்தது. சிவகாசி, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, சாத்துார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். உலக அமைதி வேண்டியும், எல்லோருக்கும் எல்லாவிதமான நன்மைகள் ஏற்படவும் , ஹரே ராம ஹரே ராம கோஷத்துடன் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர் மஹாரண்யம் முரளிதர ஸ்வாமிஜி ஆன்மிக அருளுரை வழங்கினார். காட் இந்தியா டிரஸ்ட் சிவகாசி நாமதுவார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.