உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குட்டகம் மாரியம்மன் கோவிலில் சேறு பூசி பக்தர்கள் வழிபாடு

குட்டகம் மாரியம்மன் கோவிலில் சேறு பூசி பக்தர்கள் வழிபாடு

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியை அடுத்த குட்டகம் கிராமத்தில், அத்தனூர் அம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த, 12ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.

அதை தொடர்ந்து அத்தனூர் அம்மனுக்கு, பொங்கல் வைபவம் மற்றும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் இரவில் கம்பத்தை சுற்றி ஒயிலாட்டம், கம்பம் ஆடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (அக்., 21ல்) காலை மாரியம்மனுக்கு, மாவிளக்கு பூஜை, மதியம் பொங்கல் வைபவம் நடந்தது. விழாவில், விவசாயம் செழிக்க வேண்டி, பக்தர்கள் உடம்பில் சேறு பூசி, வேப்பிலை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 6:00 மணிக்கு கம்பம் பிடுங்கப்பட்டது. புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (அக்., 21ல்) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !