கரூர் அருகே,லிங்கேஸ்வரர் கோவிலில் சங்கு அபிஷேகத்திற்கு முன்பதிவு
ADDED :2220 days ago
கரூர்: க.பரமத்தி அருகே, தென்னிலை தேவேந்திர லிங்கேஸ்வரர் கோவிலில், வரும், 29ல், காலை, 4:30 மணிக்கு, குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அதில், சுவாமிக்கு, 108 வலம்புரி சங்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் உட்பட பல்வேறு வழிபாடுகள் நடக்கவுள்ளன. அதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், குடும்ப உறுப்பினர் பெயர்கள், ராசிகளை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், அன்னதானத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர் போன்றவற்றை வழங்க விரும்புபவர்கள், விழா நாளுக்கு முதல் நாளான, 28ல், பகல், 12:00 மணிக்கு வழங்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.