வீரட்டானேஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அலங்காரம்
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சுவாமிக்கு, மாலை 5:00 மணிக்கு உலக நன்மை வேண்டி மகாயாகம் நடந்தது. 6:00 மணிக்கு 108 ஹோம திரவியங்களால் மஹா கணபதி யாகம், சொர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம், காலபைரவர் ஹோமம், பால்,தேன், சந்தனம் மற்றும் 21 வகையான மூலிகை பொடி, கலச நீர் ஆகியவற்றால் மகா அபிஷேகம் நடந்தது. பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகமும் காலபைரவருக்கு 108 சங்காபிஷேகமும், பால், தயிர் உட்பட 18 பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.