காலகாலேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை
ADDED :2230 days ago
கோவில்பாளையம் : கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி, லட்சார்ச்சனை விழா வரும், 29ம் தேதி நடக்கிறது.குருபகவான், வரும் 29ம் தேதி, காலை 3:49 மணிக்கு, விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையடுத்து, கோவில்பாளையத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான காலகாலேஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு, லட்சார்ச்சனை நடக்கிறது.வரும் 29ம் தேதி அதிகாலை, 2:00 மணிக்கு யாக பூஜை நடக்கிறது.குருபெயர்ச்சி அதிகாலை, 3:49 மணிக்கு நடக்கிறது. இதையடுத்து, கலசாபிசேகம், அலங்காரம், அபிசேக பூஜை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.