மேலகரத்தில் 15ம் தேதி திருவிளக்கு பூஜை!
ADDED :5176 days ago
தென்காசி : மேலகரத்தில் வரும் 15ம் தேதி திருவிளக்கு பூஜை நடக்கிறது. தென்காசி சத்குரு மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் சபை சார்பில் மேலகரம் என்.ஜி.ஓ.காலனி திரிகூட ராஜப்ப கவிராயர் திருமண மண்டபத்தில் வரும் 15ம் தேதி மாலையில் திருவிளக்கு பூஜை, சத்சங்கம், தியானம், பஜனை நடக்கிறது. கொல்லம் மாவட்டம் அமிர்தபுரி மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம் அஜாம்ருதசைதன்யா தலைமை வகிக்கிறார். உலக அமைதிக்காகவும், அனைவரும் ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெறவும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. திருவிளக்கு பூஜையில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். பூஜையில் பங்கேற்க வருபவர்கள் விளக்கு கொண்டு வர வேண்டும்.