மணிமூர்த்தீஸ்வரம் கோயிலில் தாமிரபரணி புஷ்கரணி யாகம்!
திருநெல்வேலி : மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில் தாமிரபரணி புஷ்கர யாகம் நடந்தது. தாமிரபரணி அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் தாமிரபரணி புஷ்கர யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான புஷ்கர யாகம் மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில் நடந்தது. நிர்வாக அறங்காவலர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், மாவட்ட செயலாளர் பி.எஸ்.கே.சிவக்குமார், மாநகர் தலைவர் எஸ்.ஆர்.எஸ்.ராஜா, பாளை., மண்டல தலைவர் முத்துவேலப்பன், மேலப்பாளையம் மண்டல தலைவர் சின்னத்துரை, செயலாளர் முத்துராஜ் மற்றும் உச்சிஷ்ட கணபதி ஆலய திருப்பணிக்குழுவினர், என்.எஸ்.பிச்சுமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யப்ட்டது. தாமிரபரணியை பாதுகாக்க பக்தர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர். பி.எஸ்.கே.சிவக்குமார் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கார்த்தீசன், கீதா கார்த்தீசன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.