உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் கோவில்களில் அமாவாசை வழிபாடு

மயிலம் கோவில்களில் அமாவாசை வழிபாடு

மயிலம் : மயிலம் பகுதி கோவில்களில் அமாவாசையை முன்னிட்டு வழிபாடு நடந்தது.மயிலம் அடுத்த பாதிராபுலியூர் சோலைவாழியம்மன்,கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு காலை 8:00 மணிக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பிற்பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து. மாலை 6:00 மணி கூட்டு வழிபாடு செய்தனர். இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதேபோல், மோழியனுார் அக்கர காளியம்மன், தென்பசியார் பெரியபாளையத் தம்மனுக்கும், மயிலம் மயிலியம்மன், கூட்டேரிப்பட்டு, கொல்லியங்குணம் காளியம்மன் கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !